Sunday, April 30, 2017

காஸ்ட்லி கட்டணம்... காட்சிப் பொருளான மெட்ரோ ரயில்!

காஸ்ட்லி கட்டணம்... காட்சிப் பொருளான மெட்ரோ ரயில்!

சென்னையில் இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை ஒரு வழித்தடம். சின்னமலை முதல் விமான நிலையம் வரை இன்னொரு வழித்தடம். சொகுசான பயணம் சாத்தியம் என்றாலும் மெட்ரோ ரயில், எதிர்பார்த்த அளவுக்கு மக்களை ஈர்க்கவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.  

கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூருக்கு ஆட்டோ அல்லது கால் டாக்ஸியில் வசதியாகப் பயணித்தாலும், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்க வேண்டியிருக்கும். ஆனால், மெட்ரோ ரயிலில் விரைவாகவும் எளிதாகவும் சென்றுவிடலாம். முழுக்க ஏ.சி வசதி கொண்டது என்பதால், புழுக்கமும் புகையும் தாக்காது. பெண்களுக்குத் தனி இருக்கைகள் உண்டு. இவையெல்லாம் மெட்ரோ ரயிலின் ப்ளஸ் பாயின்ட்டுகள்.

காஸ்ட்லி கட்டணம்... காட்சிப் பொருளான மெட்ரோ ரயில்!

கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூருக்கு ஆட்டோ அல்லது கால் டாக்ஸியில் வசதியாகப் பயணித்தாலும், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்க வேண்டியிருக்கும். ஆனால், மெட்ரோ ரயிலில் விரைவாகவும் எளிதாகவும் சென்றுவிடலாம். முழுக்க ஏ.சி வசதி கொண்டது என்பதால், புழுக்கமும் புகையும் தாக்காது. பெண்களுக்குத் தனி இருக்கைகள் உண்டு. இவையெல்லாம் மெட்ரோ ரயிலின் ப்ளஸ் பாயின்ட்டுகள்.

மெட்ரோ ரயிலை மற்ற போக்குவரத்துகளோடு இணைப்பதில் இன்னும் பிரச்னை இருக்கிறது. கிண்டி, பரங்கிமலை ஆகிய இடங்களில் மட்டும் மெட்ரோ ரயில் நிலையமும், புறநகர் ரயில் நிலையமும் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. சைதாப்பேட்டை, நந்தனம் ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. அவை பயன்பாட்டுக்கு வந்த பின்னர், மெட்ரோ ரயிலில் இருந்து அங்கே இறங்கும் பயணிகள், சைதாப்பேட்டை அல்லது மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களுக்குச் செல்லும் வகையில் போக்குவரத்து வசதி எளிமை ஆக்கப்பட வேண்டும். அதேபோல, தேனாம்பேட்டையில் டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்போது, அங்கிருந்து நுங்கம்பாக்கம் புறநகர் ரயிலுக்குச் செல்ல வசதிகள் செய்யப்பட வேண்டும். இரண்டு ரயில் சேவைகளையும் இணைக்கும் வகையில், மினி பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.  

மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் கட்டணங்கள், மிகவும் அதிகமாக உள்ளன. புறநகர் ரயில், மாநகரப் பேருந்து போல சீஸன் டிக்கெட் சலுகையும் இல்லை. இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் அமைப்பின் தலைவர் இளங்கோவனிடம் கேட்டோம். “சென்னை மாநகரத்தில் இரு சக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் ஆகியவற்றால் ஏற்படும் நெரிசலைக் குறைக்க வேண்டும் என்பதுதான், மெட்ரோ ரயிலின் நோக்கம். மெட்ரோ ரயில் கட்டணங்களைக் குறைத்தால்தான் இது சாத்தியம். 10 கி.மீ  பயணத்துக்கு 40 ரூபாய் வாங்குகின்றனர். அது மட்டுமல்ல, மெட்ரோ ரயில் அனைத்துப் பாதைகளிலும் ஓட ஆரம்பித்த பின்னர், 45 கி.மீ-க்கு 70 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை கட்டணம் இருக்கும் என்று சொல்கின்றனர். டெல்லி மெட்ரோவில் 47 கி.மீ தூரத்துக்கே 30 ரூபாய்தான் கட்டணம்.

காஸ்ட்லி கட்டணம்... காட்சிப் பொருளான மெட்ரோ ரயில்!

சென்னையில், சாதாரண மக்களுக்கு ஏற்றதாக கட்டண விகிதங்கள் இல்லை. மெட்ரோ ரயில் நிலையங்களைத் தேடிச் சென்று, படிகளில் ஏறிச்சென்று, அதிகமான கட்டணத்தில் டிக்கெட் எடுத்துப் பயணிக்க மக்கள் ஏமாளிகள் அல்ல. குறைவான கட்டணங்களால் மட்டுமே பயணிகளை ஈர்க்க முடியும். அதிகம் பேர் பயணம் செய்தால், நஷ்டத்தைக் குறைக்க முடியும். நஷ்டம் ஏற்பட்டால், அதை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும். கொல்கத்தா மெட்ரோ ரயிலில் குறைந்தபட்சக் கட்டணம் ஐந்து ரூபாய் மட்டுமே. அங்கு மெட்ரோ ரயில் நஷ்டத்தை ரயில்வே நிர்வாகம் ஈடுகட்டுகிறது. அதுபோன்ற கட்டண விகிதங்கள் இங்கும் வர வேண்டும். பொதுப் போக்குவரத்து வசதிகளில், தேச லாபத்தைத்தான் கவனிக்க வேண்டும். மெட்ரோ ரயில் பயன்பாட்டால், சாலைகளில் வாகனங்கள் குறையும். இதனால், எரிபொருள் சிக்கனம் ஏற்படும்” என்றார். 

காஸ்ட்லி கட்டணம்... காட்சிப் பொருளான மெட்ரோ ரயில்!

தேசியப் போக்குவரத்துத் திட்டம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் என்.எஸ்.சீனிவாசனிடம் பேசினோம். “டெல்லி மெட்ரோ ரயிலில் குறைந்தபட்சக் கட்டணமாக எட்டு ரூபாய் இருக்கிறது. அதிகபட்சக் கட்டணம் 50 ரூபாய். இதையே அதிகம் என்கின்றனர் அங்கு. சென்னை மெட்ரோ ரயிலில் குறைந்தபட்சக் கட்டணம் 10 ரூபாய். அதிகபட்சம் 50 ரூபாயாக இருக்கிறது.  ஆனால், தூரம் என்னவோ ரொம்பக் குறைவு. சென்னையில் பேருந்துக் கட்டணம் குறைந்தபட்சமாக மூன்று ரூபாய்தான் இருக்கிறது. அதிகபட்சம் 14 ரூபாய். மெட்ரோ ரயிலில் போக வேண்டும் என்றால் வீட்டில் இருந்து டூ வீலரில் ரயில் நிலையம் செல்ல வேண்டும். அங்கே வண்டியை நிறுத்தி விட்டு, மெட்ரோ ரயிலில் சென்று இன்னொரு இடத்தில் இறங்கி, அங்கிருந்து அலுவலகம் செல்ல வேறு வாகனத்தில் பயணிக்க வேண்டி இருக்கிறது. ‘இப்படி தினமும் ஒருவர் அதிக அளவு செலவழிக்க முடியுமா’ என்ற கேள்வி எழுகிறது.

மிக அதிகமான நிதி முதலீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் பெருமளவு கடன் வாங்கியிருக்கிறார்கள். பொதுமக்கள் பயன்பாடும் முக்கியம், திட்டத்துக்கான செலவும் முக்கியம்தான். இந்த இரண்டில் அரசு எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்போகிறது என்பதில்தான் மெட்ரோ ரயிலின் வெற்றி இருக்கிறது” என்றார் அவர்.  

(அடுத்த இதழில்)

‘‘கட்டணத்தைக் குறைக்க வேண்டும்!’’

ஆலந்தூர் ரயில் நிலையத்தில் பயணிகள் சிலரிடம் பேசினோம். 

சங்கீதா: “நான் சிறுசேரியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுகி்றேன். வழக்கமாக கோயம்பேட்டில் இருந்து சிறுசேரிக்கு பஸ்ஸில் சென்றால் இரண்டரை மணி நேரம் ஆகிறது. ஆனால், மெட்ரோ ரயிலில் கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வந்து, இங்கிருந்து கால் டாக்சி அல்லது ஆட்டோவில் செல்வேன். இதில் ஒரு மணி நேரம் மிச்சம் ஆகிறது.”

காஸ்ட்லி கட்டணம்... காட்சிப் பொருளான மெட்ரோ ரயில்!

விஜய்: “இப்போது காலை, மாலை வேளைகளில் மெட்ரோ ரயில் கூட்டமாகத்தான் இருக்கிறது. இது பொதுப்போக்குவரத்து என்பதால் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். அப்போதுதான், அதிகமான மக்கள் மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துவார்கள்.” 

செந்தில்: “சோழிங்கநல்லூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறேன். தினமும் கோயம்பேட்டில் இருந்து எங்களுடைய கம்பெனி பஸ்ஸில்தான் அலுவலகம் செல்வேன். கம்பெனி பஸ்ஸைத் தவறவிட்ட சமயங்களில், மெட்ரோ ரயிலில் பயணிப்பேன். கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வருவதற்கு 15 நிமிடங்கள்தான் ஆகிறது. இதனால், நேரம் மிச்சமாகிறது. பயணமும் எளிதாக இருக்கிறது.” 

News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment