Wednesday, April 26, 2017

நாராயணசாமியின் திடீர் பாசம்... புதுச்சேரி குத்து வெட்டு

நாராயணசாமியின் திடீர் பாசம்... புதுச்சேரி குத்து வெட்டு

கூட்டணிக் கட்சியான தி.மு.க-வைக் கண்டுகொள்ளாமல், அ.தி.மு.க-வினருடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திடீரென காட்டிவரும் ‘பாசம்’, காங்கிரஸ் - தி.மு.க கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தி வருகிறது.

2016 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது காங்கிரஸ். 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில், 15 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், இரண்டு இடங்களில் தி.மு.க-வும் வென்றன. ஆட்சி அமைக்க 16 இடங்கள் தேவை என்ற நிலையில், தி.மு.க-வின் தயவுடன் ஆட்சியில் அமர்ந்தது காங்கிரஸ்.

2011 தேர்தலில் காங்கிரஸில் இருந்து வெளியேறி, தனிக்கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்த என்.ரங்கசாமி, நாராயணசாமியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதைக் கண்டுகொள்ளாமல் மல்லாடி கிருஷ்ணாராவ், தேனீ ஜெயக்குமார், பி.ஆர்.என்.திருமுருகன் போன்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுடன் நெருக்கம் காட்டி,  நாராயணசாமியைக் கொதிப்படைய செய்தார் ரங்கசாமி. தற்போது, அந்த பாணியை நாராயணசாமியும் கடைபிடிக்கிறார். அது, பல எதிர்வினைகளைக் கிளப்பிவிட்டது. தி.மு.க-வைக் கொதிக்க வைத்திருக்கிறது. 

‘பெயர் வேண்டாம்’ என்ற நிபந்தனையுடன் பேசிய தி.மு.க புள்ளிகள் சிலர், “காங்கிரஸ் கட்சியினர் தங்களுடைய சுயநலத்துக்காகக் கூட்டணி தர்மத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டனர். எங்களை அழிக்க நினைக்கும் அ.தி.மு.க-வுடன் கைகோத்துக் கொண்டிருக்கிறார்கள். முதலியார்பேட்டைத் தொகுதியில் எங்கள் வேட்பாளர் லயன்.சுரேஷை எதிர்த்துப் போட்டியிட்டவர்தான், அ.தி.மு.க எம்.எல்.ஏ பாஸ்கர். தேர்தல் பிரசாரத்தில் ‘கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்’ என எங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். ஆனால், சாதாரண நகராட்சி ஆணையர் விவகாரத்தில், அரசு எந்திரம் ஸ்தம்பிக்கும் அளவுக்கு அவருக்கு ஆதரவாக வரிந்துகட்டிக்கொண்டு செயல்பட்டார்கள். அதேபோல, உப்பளம் தொகுதியில் எங்கள் வேட்பாளர் கென்னடியை எதிர்த்துப் போட்டியிட்டவர் அ.தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன். ‘கிரண்பேடியை எதிர்த்து அறிக்கை விடுகிறார்கள்’ என்ற ஒரே காரணத்துக்காக, இவரிடமும் பாஸ்கரிடமும் அளவுக்கு அதிகமான நெருக்கத்தைக் காண்பிக்கிறார் முதல்வர் நாராயணசாமி. கிரண் பேடி விவகாரத்தில், நாராயணசாமிக்கு ஆதரவாக எங்கள் செயல் தலைவர் ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டார். அதற்கு மறுநாளே, மண்ணாடிப்பட்டுத் தொகுதியில் எங்கள் வேட்பாளர் குமாரை எதிர்த்துப் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ்     எம்.எல்.ஏ-வான டி.பி.ஆர்.செல்வத்துக்கு அரசு கார் வழங்குகிறார்கள். அவர், கிரண்பேடிக்கு எதிரான கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பதற்காகவே கார் கொடுத்துள்ளார்கள்.  கோயில் அறங்காவலர் குழுவில் கூட, நாங்கள் சொல்லும் ஒருவரை நியமிக்காமல் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ சொல்பவரை நியமிக்கிறார்கள். தேர்தல் கூட்டணிக்காக மட்டும் எங்களைப் பயன்படுத்திக்கொண்டு, கறிவேப்பிலை  போல எங்களைத் தூக்கி எறிந்துவிட்டனர் காங்கிரஸ் கட்சியினர். ஆனால், ‘கூட்டணி அரசு’ என்று சொல்லி வாய்ஜாலம் காட்டுகிறார் முதல்வர். அவர்கள் கட்சியினருக்கு மட்டும் வாரியத் தலைவர் பதவிகளைப் பெற்றுக்கொண்டு, எங்களைக் கழற்றி விட்டுவிட்டனர்.

நாராயணசாமியின் திடீர் பாசம்... புதுச்சேரி குத்து வெட்டு

முதியோர் பென்ஷன், வங்கிக் கடன் போன்றவற்றுக்கான விண்ணப்பங்களில் அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்குத்தான் முன்னுரிமை தருகிறார்கள். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். நாங்கள் தோற்றுவிட்டோம் என்பதற்காக தொகுதியில் அரசியல் செய்வதை விட்டுவிட வேண்டுமா? ஏற்கெனவே, எங்களின் பாரம்பர்யத் தொகுதியான நெல்லித்தோப்பைப் பறித்து, அதைக் காங்கிரஸ் தொகுதியாக மாற்றிவிட்டார் நாராயணசாமி. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வும், என்.ஆர். காங்கிரஸும் இவர்களுக்கா வந்து வாக்குச் சேகரிக்கப் போகின்றன? எங்கள் உள்ளக் குமுறலை, எங்கள் செயல் தலைவர் ஸ்டாலினுக்குக் கடிதமாக எழுதி அனுப்பியிருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் யார் என்பதை இவர்களுக்குக் காட்டுவோம்” என்று கொந்தளித்தனர்.

“எதிர்க்கட்சிகள் மீதான திடீர் காதலால், தி.மு.க.-வை ஒதுக்குவது தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு ஆரோக்கியமானது இல்லை. இந்த விவகாரம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி உடைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும்” என எச்சரிக்கின்றனர் புதுச்சேரி அரசியலை நன்கு அறிந்தவர்கள். 

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment