Sunday, April 30, 2017

ஜூ.வி நூலகம் - ஜெயலலிதா காலில் விழுந்த முதல் ஆள்?

ஜூ.வி நூலகம் - ஜெயலலிதா காலில் விழுந்த முதல் ஆள்?

மைசூரில் தொடங்கிய ஜெயலலிதாவின் பயணம், போயஸ் கார்டனில் முடிந்தது. மரணத்துக்குப் பிறகும் அவரது பயணம், மர்ம நாவல் போல் தொடர்கிறது. அவர் மீதான அரசியல் விமர்சனங்களைத் தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால், வாழும்போதும் நிம்மதியாக இல்லை. சாகும்போதும் நிம்மதியாகச் சாகவில்லை. மரணம் தாண்டிய காலத்திலும் அவர் தலை, அரசியல் தாயக்கட்டத்தில் உருட்டப்படுகிறது. 

அவரின் நிஜக் கதை இது. செயல்படும் பத்திரிகையாளராக இருக்கும் மு.நியாஸ் அகமது, ஆனந்த விகடன் இணையதளத்தில் எழுதியதன் தொகுப்பே இந்த நூல். ‘ஒருவர் இரும்புக் கோட்டையில் வாழ்ந்தால், அவரைக் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்தானே? அப்படியான விருப்பம்தான் ஜெயலலிதா குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்வதில் எனக்கும் இருந்தது’ என்று நியாஸ் சொல்வதுதான் அனைவரது விருப்பமும். ஒரு பெண், அதுவும் நடிகை, நான்கு சுவர்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்தவர், மூன்று முறை முதலமைச்சர், கால் நூற்றாண்டு காலம் தமிழக அரசியல் அவரைச் சுற்றியே இருந்தது... ஜெயலலிதா பற்றி தேடுவதற்கும் படிப்பதற்கும் இவை போதாதா?

ஜெயலலிதா தனது வாழ்நாளில் அதிகமாக புகழப்பட்டார்; அதிகமாக இகழப்பட்டார். இந்த இரண்டு காரியத்தையும் நியாஸ் செய்யவில்லை. ‘‘நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்’’ என்றார் ஜெயலலிதா. அவர் தாண்டிய குடும்ப, திரைப்பட, அரசியல் நரகங்களை நீங்களும் உணரலாம். ‘‘நான் இதுவரை நிபந்தனையற்ற அன்பை உணர்ந்ததே இல்லை” என்று ஜெயலலிதா சொன்னார். அவர் அன்பால் ஆக்கிரமிக்கப்பட்ட, அன்பை அவர் விரட்டிய காட்சிகளை இந்த நூலில் படிக்கலாம். ஜெயலலிதா மூலமாக அந்தக் காலக்கட்டத்து திரைப்பட, அரசியல் நிகழ்வுகளை அறியலாம். சுவாரஸ்யமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. 

எல்லாருக்கும் ஒரு கேள்வி இருக்கும். ‘ஜெயலலிதா காலில் விழுந்த முதல் ஆள் யார்’ என்று. 1991 ஜூலை 24-ம் தேதி, சென்னை பல்கலைக்கழக மண்டபத்தில் வைத்து ஜெயலலிதா காலில் விழுந்த முதல் ஆள், செங்கோட்டையன் என்ற கண்டுபிடிப்பு இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. ஜெயலலிதாவும் கருணாநிதியும் 17 ஆண்டுகள் கழித்து நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட நாள், 2006 மே 27.

‘‘உங்களுக்குப் பிறகு அ.தி.மு.க. தலைவர் யார்?’’ என்று கேட்கப்பட்டபோது, ‘‘தகுதியுடையவர் யார் என்பதை உடன்பிறப்புகள் தேர்வு செய்வார்கள்’’ என்றாராம் ஜெயலலிதா. அத்தகைய தேர்வு நடக்கும் கட்டத்தில் வந்துள்ளது இந்தப் புத்தகம்.

தேர்வுக்கு உதவும்.

மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை
ஜெயலலிதா டைரி குறிப்புகள்!

 - மு.நியாஸ் அகமது

விகடன் பிரசுரம், 
757 அண்ணா சாலை,
சென்னை-2
தொலைபேசி: 044-42634283
விலை: ரூ.140/-

News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment