Monday, February 06, 2017

“காளைகளைப் பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு!” - சபாஷ் பராசரன்

“காளைகளைப் பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு!” - சபாஷ் பராசரன்

ல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டம் தொடர்பான வழக்கு கடந்த ஜனவரி 31-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ‘‘எந்த அடிப்படையில் தமிழக அரசு, இந்த அவசரச் சட்டத்தை நிறைவேற்றியது?” என்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகிண்டன் ஃபாலி நாரிமன் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பராசரன், வாதங்களை எடுத்து வைத்தார். “இந்திய அரசியல் சாசனம், மாநில அரசுக்குக் கொடுத்துள்ள அதிகார வரம்புக்கு உட்பட்டு தமிழக அரசு, மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்துள்ளது. அதில், மிகத் தெளிவாக ஜல்லிக்கட்டுக்கும், சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கும் தேவையான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. காளைகளையும் பண்பாட்டையும் காக்கும் நல்ல நோக்கம் மட்டுமே அதில் இருக்கிறது. அதைப் பரிசீலித்து, இந்திய ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார். விரைவில், அரசிதழில் திருத்தச் சட்டம் வெளியிடப்பட உள்ளது” என்று விளக்கம் கொடுத்தார்.

 விலங்குகள் நல அமைப்புகள் கூறிய குற்றச்சாட்டுக்குப் பதில் சொன்ன வழக்கறிஞர் பராசரன், “மிருகவதை தடைச் சட்டத்தில் முரண்பாடுகள் உள்ளன. அந்த முரண்பாடுகளைச் சட்டம் அங்கீகரிக்கிறது. அந்தச் சட்டத்தில் மதச் சடங்குகள் என்ற பெயரில், மிருகங்களைக் கொல்வதும் பலியிடுவதும் அனுமதிக்கப்படுகிறது. அது சரியா? தவறா என்பது வேறு பிரச்னை. ஆனால், கொல்வதும் பலியிடுவதும் நம்பிக்கையின் பெயரால், பண்பாட்டின் பெயரால், கலாசாரத்தின் பெயரால் அனுமதிக்கப்படுகிறது என்பதுதான் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம். தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தமும் பண்பாட்டைக் காக்கும் நோக்கில் காளைகளைப் பாதுகாக்க வழி செய்கிறது.

பார்க்கப்போனால், பிராணிகள் நல அமைப்புகளின் நோக்கத்தை தமிழக அரசின் சட்டத் திருத்தம்தான் பூர்த்தி செய்கிறது. நீதிமன்றத்துக்கு உதாரணம் காட்ட வேண்டுமென்றால், ஜல்லிக்கட்டு வழக்கத்தில் இருந்த காலத்தில் காளைகள் கொல்லப்பட்டது சொற்பம்; அடிமாடாகப் போனவை குறைவு. மாறாக, ஜல்லிக்கட்டுத் தடை செய்யப்பட்ட காலத்தில் கொல்லப்பட்ட காளைகள் அதிகம். அந்தக் காலத்தில் ஏற்றப்பட்ட அடிமாடுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். அதற்கு ஆதாரங்கள் உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தடை இருந்ததால், தமிழ்நாட்டில் இதுவரை 5,724 ஜல்லிக்கட்டுக் காளைகள் விற்கப்பட்டுள்ளன. எனவே, நாங்கள் காளைகளைப் பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு நடத்துகிறோம்” என்றார்.

“காளைகளைப் பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு!” - சபாஷ் பராசரன்

“உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, தமிழக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டிய அவசியம் ஏன் உருவானது? காவிரி விவகாரத்தில் கர்நாடக மக்களும் இதுபோல் போராடுகிறார்கள். அதனால், அவர்களின் போராட்டம் சரி என்றாகிவிடுமா?” என்று நீதிபதிகள் கேட்டனர்.  தமிழக அரசு சார்பில் பதில் அளித்த மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், “கர்நாடகாவில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து வன்முறைப் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி அறவழிப் போராட்டம் மட்டுமே நடத்தப்பட்டது. தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் உயிர்ச் சேதம் இல்லை; வன்முறை இல்லை. அவசரச் சட்டம் இயற்றப்படும்வரை, நீதிமன்றத் தீர்ப்பை மீறி யாரும் அடாவடியாக ஜல்லிக்கட்டை நடத்தவில்லை. அதனால், கர்நாடகத்தில் நடந்தது வேறு... தமிழகத்தில் நடந்தது வேறு”  என்று விளக்கம் கொடுத்தார்.

ஜல்லிக்கட்டு குறித்து பராசரன் அளித்த விளக்கமும் ‘உச்ச நீதிமன்றத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தவில்லை’ என்ற விளக்கமும் நீதிபதிகளை மனமாற்றம் செய்தது. அதனாலேயே தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆறு வார காலத்துக்குப் பிறகு, மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நடக்கும்.

- ஜோ.ஸ்டாலின்
படம்: எஸ்.சாய்தர்மராஜ்



“காளைகளைப் பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு!” - சபாஷ் பராசரன்

சுவாமியின் கெடுதல்!

தமிழக அரசின் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டபோது குறுக்கிட்ட பி.ஜே.பி எம்.பி-யான சுப்பிரமணியன் சுவாமி, “தமிழகத்தில் வன்முறை இல்லை என்பது பொய். காவல் நிலையமே கொளுத்தப்பட்டது. புதுக்கோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டில் இருவர் இறந்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று போராட்டக்காரர்கள் சொன்னார்கள்” என்று குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட தமிழக வழக்கறிஞர் சோமசுந்தரம், “இன்று ஜல்லிக்கட்டை எதிர்க்கும் சுப்பிரமணியன் சுவாமி, ஜல்லிக்கட்டை ஆதரித்து இதே நீதிமன்றத்தில் முன்பு வழக்காடி இருக்கிறார். தமிழகத்தில் போராட்டம் அமைதியாக நடந்தபோது தமிழர்களைப் ‘பொறுக்கி’ எனக் கொச்சையான வார்த்தையால் திட்டினார். அதோடு, அமைதியான போராட்டத்தை திசை திருப்பும் வகையில் வன்முறையைத் தூண்டும் கருத்துக்களை சுப்பிரமணியன் சுவாமிதான் தெரிவித்தார். இது நியாயமா?” என்று கேள்வி எழுப்பினார். அதன்பிறகு சுவாமி அமைதியாக உட்கார்ந்தார்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment